About Me

header ads

இந்துக் கோவிலின் அடிப்படை அம்சங்களும் கலை ஆக்கங்களும் பகுதி 1


                            இந்து சமயம் (Hinduism) இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றெனக் கருதப்படுகிறது. ஏறக்குறைய 850 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது. பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலும், நேபாளத்திலும் வசிக்கின்றார்கள். இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், பிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள். 

கீழே காண்கின்ற படங்களில் உள்ள கோவில்களுக்கு சென்றிருக்கிறீர்களா? அதன் கட்டிட அமைப்பு  மற்றும் கலை வேலைப்படுகளை அவதானித்திருந்தால்  அங்கு விசேடமான பகுதி என நீங்கள் நினைக்கும் பகுதி யாதென (comment box )கருத்துரைப் பெட்டியில் கருத்துரைக்கலாம்.

நல்லூர் - யாழ்ப்பாணம்

திருகோணேஸ்வரம் - திருகோணமலை
முன்னேஸ்வரம் - சிலாபம்


இந்து கோவில் கட்டிட அமைப்பு

இலங்கையில் உள்ள இந்துக் கோவிலின் கட்டிட நிர்மான அமைப்புக்கள் தென்னிந்திய கட்டிட கொள்கைகளை சார்ந்து காணப்படுகின்றன.  இக் கட்டிட அமைப்பு மனித உடலுடன் ஒப்பிட்டு பார்க்கும் வகையில் அமைந்திருக்கும்.
ஒரு மனிதன் மல்லாந்து படுத்திருந்தால் அவனது பாதம் மேல்நோக்கி இருக்கும். அது போலவே கோபுரம் உயர்ந்திருக்கும். கொடி மரம் மனிதனி முதுகுத் தண்டுக்கு ஒப்பானது. வாயிலில் இருக்ககூடிய துவார பாலகர் நம் தோள்களைக் குறிக்கிறது.



பொதுவாக கோவிலின் பகுதிகளை பிரதானமாக 4  ஆக வகைக்குறிக்க முடியும்.
1. கோபுரம்
2. மண்டபம்
3. சுற்றுப்பிரகாரம்
4. கர்ப்பக்கிரகம்

 இப் பகுதிகளை அடுத்த  பதிவில்  (இந்துக் கோவிலின் அடிப்படை அம்சங்களும் கலை  ஆக்கங்களும் - பகுதி 2) தனித்தனியாக விபரமாக பார்க்கலாம்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்