உலகில் சித்திரக்கலை ஆரம்பித்த காலத்தை உறுதியாக கூறமுடியாவிட்டாலும், வரலாற்றுக்கு முற்பட்ட கற்குகைகளில் (பலியோதிலிக், நியோதிலிக் கால மனிதர்களால் வரையப்பட்ட மிகப்பழமையான ஓவியங்கள் பல ஆய்வுகளின் போது கிடைத்துள்ளன. ‘PALIO’ எனும் சொல் பழைய/OLD ஏனும் அர்த்தத்திலும் ‘lithic’ எனும் சொல் கல்/stone எனும் அரத்தத்திலும் வழங்குவதாகும். இவ் வழக்கத்தில் paliothilic period என வரலாற்றுப் பிtவு ஏற்படுத்தப்பட்டது. இக் காலத்தை பழைய கற்காலம் ‘old stone age’ எனவும் அழைக்கப்படுகின்றது. (http://daphne.palomar.edu/mhudelson.studyGuides/PaleoNeo WA.html
இக் கால மனிதர்கள் மனிதாபிமானத் தன்மையில் 90 வீதமானவற்றையே கொண்டிருந்தார்கள்.
இவர்கள் வேட்டையாடி உணவுசேகரித்தலையே வாழ்க்கையாகக் கொண்டிருந்தனர். இக்காலம் மனதர்கள் .இப்புவியில் வாழ்ந்த காலத்தில் பெரும்பகுதியை உள்ளடக்கின்றது. (ஏறத்தாழ மனித வரலாற்றில் 99 வீதமானது) இது 2.5 அல்லது 2.6 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னிருந்து இக்காலம் தொடங்குகின்றது. அதாவது கி.மு 40000 ஆண்டுகளிலுருந்த இக் கலைவரலாறு தொகுக்கப்பட்டிருக்கின்றது. இக் காலப் பகுதிக்கு முன்னரே மரம், கல், எலும்பு போன்றவற்றில் பல நுட்பமான மாற்றங்களை செய்துகொள்ள பழகிக்கொண்ட இவர்களின் கலைப் படைப்புக்கள் இரண்டுவிதமாக கலைவடிவங்களில் ஆய்வு செய்யப்படுகின்றுது.
1. பலியோதிலிக் மனிதர்கள் தமது வசிப்பிடங்களில் விட்டுச் சென்ற சிறய அளவிலான பொருட்கள் (MINIACHER ART THINKS)
2. அவர்கள் வசித்த குகைகளில் அவர்களால் வரையப்பட்ட கோடுகள், சித்திரங்கள் மற்றும் சிற்பங்கள். (MIURAL ART)
இக் காலத்தில் கொண்டு செல்லக்கூடிய மினிஎச்சர் கலைப் பொருட்கள் அதிகமாக கிடைக்கப் பெறவில்லை. காரணம் அவைகள் மரத்தினாலும் நார்களாலும் மிருகத் தோலினாலும் செய்யப்பட்டிருந்தமையால் அழிந்திருக்கின்றன. எனினும் சிறியளவிலான கல், எலும்பு, யானைத் தந்தம் மிருகத்தின் கொம்பு போன்றதான கலைப் பொருட்கள் ஐரோப்பாவின் அல்டமீரா குகையினை அண்டிய பகுதிகளிலிருந்து கிடைக்கப்பெற்றுள்ளன. இப் பொருட்கள் இவர்கள் மிருக வேட்டைக்காக பயன்படுத்தியருப்பதனை அப் பொருட்களின் தன்மையிலிருந்த அறியக் கிடக்கின்றது. கரடு முரடான கற்களை மிகவும் கூர்மையாக்கி பயன்படுத்தியிருக்கின்றனர். அத்தோடு மூட நம்பிக்கை காரணமாக சமய சம்பிரதாய செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக செய்யப்பட்ட சிறிய மனித உருவென்று சொல்லத்தக்க சிற்பங்களும் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றது. அனேகமாக இவர்கள் இவ் உருவங்களுக்கு வேட்டையாடப்பட்ட விலங்கின் இரத்தத்தினை காணிக்கை செய்யதிருந்திருக்க வேண்டும். இதனால் கடவுள் இன்னும் நிறைய மிருகங்களைத் தமக்குத் தருவார் என நம்பினர். இதன்பிரகாரம் மாயவித்தைகளுக்கும் சமய வழிபாட்டிருற்கும் அதிகளவிலான மினிஎச்சர் கலைப் பொருட்கள் உருவாக்கப்பட்டன. இது போல கிழக்கு ஐரோப்பா, வடக்கு ஆபிரிக்காப் பிரதேசத்துக் குகைகளில் இருந்து அதிகமான கலைப் படைப்புக்கள் கிடைத்துள்ளன. கடினமான யானைத்தந்தத்தில் ஆன ஆயுதங்கள் சில கற்குகைகளுல் இருந்து கிடைத்துள்ளன. எனினும் 'இவர்கள் இவற்றை கலைவெளிப்பாடு என அக்காலத்தில் உணர்ந்திருக்கவில்லை என்றும் பலியோதிலிக் மனிதர்கள் அக் கால சமூகத்தில் வேட்டையில் வெற்றியீட்டவும் பெண்கள் தொடர்பான வளத்தை நோக்கியுமே இச் செயற்பாடுகளைச் செய்தார்கள்' என்றும் ஐரோப்பிய ஆய்வாளர்களான James Horred and Vicent w.Fallio ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.
இக் கால மனிதர்கள் தங்கள் குகைகளுக்குள் வரையப்பட்ட ஓவியங்கள் (மியூரல் கலை) மிகவும் சிறப்பு வாய்ந்தவையாக இருக்கின்றன. பிரான்சில் சில குகைகளும் ஸ்பானியாவில் சில குகைகளிலும் இச்சித்திரங்கள் கிடைத்துள்ளன. இச்சித்திரங்கள் மூலம் அக்காலத்து மனிதர்களது கலை இரசனை,கலைத்திறன்,வாழ்க்கை முறைகள் போன்ற பல தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதினைக் குறிப்பிட்டாக வேண்டும்.
வேட்டையாடுவதைத் தொழிலாகக் கொண்டு வாழ்க்கை நடாத்திய கற்குகைவாசிகள் தாம் கண்ட விலங்குகளை,அவற்றின் அங்க அசைவுகளை தாம் வாழ்ந்த குகைச்சுவர்ப்பரப்புகளிலும் முகடுகளிலும் வரைந்துள்ளனர். பெரும்பாலும் கருப்பொருட்களாகக் கொள்ளப்பட்டவை அன்றாடம் அவர்களது ஆகாரத்தின் பொருட்டு உபயோகித்த எருது, மரை, காட்டுப்பன்றி, காண்டாமிருகம், மாமத், பைசான்எருது, குதிரை போன்ற மிருகங்களின் வடிவங்களும்,சில இடங்களில் மனிதர்களில் பல்வேறு செயற்பாட்டுடன் கூடிய உருவ வெளிப்பாடுகளையும் வரைந்து வர்ணம் தீட்டப்பட்டுள்ளன. இவை முழுவதும் குகைப் பாறையில் வரையப்பட்டவையாக இருக்கின்றன. மக்னீசியம், காபன், ஒட்சிசன் போன்ற மூலப் பொருட்களளைப் பயன்படுத்தியிருக்கன்றனர்.
சித்திரங்களில் காணப்படும் விலங்குகள் இயற்கை அமைப்பிலும் அவற்றின் உண்மையான பிரமாணத்திலும், உயிர்த்தன்மையுடனும், முப்பரிமாண இயல்புடனும்,அவற்றின் அசைவுகளை வெளிக்காட்டும் மெய்நிலைகளிலும் மிகச்சிறப்பாக வரைந்து காணப்படுகின்றன.
கூரிய ஆயுதங்களை உபயோகித்து(கல்,எலும்பு,கொம்பு)புறவடிவை ஆழமாகத்தோண்டி அவற்றில் மிருக இரத்தம்,கொழுப்பு,மண்வகைகள் ஆகியவற்றை உபயோகித்து தயாரித்துக் கொண்ட வர்ணங்களைக் கொண்டு தீட்டப்பட்டுள்ளது. வெள்ளை,கறுப்பு,இருள் மஞ்சள்,சிவப்பு கலந்த கபிலம் போன்ற வர்ணங்கள் உபயோகிக்கப்பட்டு உள்ளன.கைவிரல்கள்,மிருகமயிர் போன்றவற்றை வர்ணம்தீட்ட உபயோகிக்கப்பட்டு உள்ளதுடன் வாயினால் ஊதியும் வர்ணம் பூசப்பட்டு உள்ளது.
கற்குகையில் வாழ்ந்த மக்கள் இவ்வகையான மிருகங்களின் சித்திரங்களை வரைந்ததற்கு உரிய காரணங்கள் தொடர்பாக விமர்சகர்கள்,ஆய்வாளர்கள் பல்தரப்பட்ட கருத்துக்களை வெளியிட்டு உள்ளனர். ஆதிமனிதன் மூடநம்பிக்கை காரணமாக தாம் வேட்டையாடிய மிருகங்களின் ஆத்மசாந்தியின் பொருட்டு வரைந்து இருக்கலாம் எனவும்,தமது ஓய்வு நேரத்தை அழகியல் இரசனை உணர்வின் மூலம் கழித்து உள்ளனர் எனவும், தமது எதிர்காலச் சந்ததியினர் உணவுக்காக வேட்டையாடு மிருகங்களை இனங்காணவும் அவற்றின்மீதான பயம் இல்லாமல் போகவும் அச் சித்திரங்களை வரைந்ததாகத் தெரிகிறது. இவ்வாறு பிராணிகளை வரைவதனால் மேலும் பல விலங்குகள் தமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வரைந்து இருக்கலாம் என பல கருத்துக்கள் நிலவுகின்றன. வடக்கு ஸ்பானியா,வடக்கு ஆபிரிக்கா,பிரான்ஸ்,ஒஸ்றியா,அஸ்ரேலியா போன்ற இடங்களில் உள்ள குகைகளில் இருந்து புராதன கற்குகை ஓவியங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.
கருத்துகள்