About Me

header ads

பௌத்த ஸ்தூபி (தாதுகோபத்தின்) முக்கிய பகுதிகள்

தாதுகோபங்களின் அமைப்புக்கள் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட மரபுரீதியான அடிப்படை கட்டமைப்புக்குள்தான் அமைக்கப்படும்.  அதன் வெளித்தோற்ற வடிவங்களில் அழகியலுக்கான மாற்றங்கள் செய்யப்படுகின்றபோதும் அதன் கட்டமைப்பு மாறுவதில்லை. இந்த கட்டமைப்பில் வேறு நாடுகளுக்கிடையில் சிற்சில பகுதிகள் பெயரளவில் வேறுபடுவதையும் அவதானிக்கவேண்டும்.
இவற்றை விளங்கிக் கொள்வதற்கு  இலங்கை தாதுகோபத்தின் பகுதிகளையும் இந்தியாவின் சாஞ்சி தாதுகோபத்தின் பகுதிகளையும் ஒப்பிட்டு பார்க்கவேண்டும்

தாதுகோபத்தின் பகுதிகள்


  1. கலசம்
  2. கலசக் கொத்து
  3. கலச பீடம்
  4. தேவதை மண்டபம்
  5. சதுரக் கோட்டம்
  6. அண்டம்
  7. காவல் வளையங்கள்
  8. பாதம்




இந்தியாவின் சாஞ்சி ஸ்தூபின் பகுதி






  1. யஸ்டி
  2. ஹர்மிக
  3. அண்டம்
  4. மேதிய
  5. தோரணம்
இத்தூபிகளில் அண்டத்தின் வடிவமைப்புக்கு (கர்பயவின்) ஏற்ப தாதுகோபங்கள் ஆறு வகையாக பிரிக்க முடியும். இவ் வகைகள் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம். 

கவனிக்க  

சாஞ்சி தூபியில் காணப்படும் விசேட அம்சங்களாக தோரணம் மற்றும் மேதிய எனும் அமைப்புக்கள் காணப்படுவதை நினைவிற் கொள்க.


மேலதிக கற்றலுக்கு இந்த வீடியோ காட்சியினை பார்க்கவும்




கருத்துரையிடுக

0 கருத்துகள்