“பௌத்தர்களின் உள்ளங்களை மலரச் செய்யும் வெசாக் பண்டிகை ’’



வெசாக் பௌர்ணமி தினம் உலகெங்கும் வாழும் பௌத்த மக்களின் சிறப்பு மிக்க
ஒரு நாள் ஆகும்.

சித்தார்ந்த குமாரனின் 
  1. பிறப்பு, 
  2. புத்தர்நிலையை அடைதல், 
  3. பரிநிர்வாணமடைதல்
ஆகிய மூன்று நிகழ்வுகளை முன்னிறுத்தி இப்பண்டிகை கொண்டாடப்படும்.



வெசாக் பண்டிகையின்போது செயல்ரீதியான நற்செயல்களுக்கும் கொள்கை ரீதியான நற்செயல்களுக்கும் முன்னுரிமையளிக்கப்படும். அதன் காரணமாக  பக்தர்கள்  ”தன்சல” என சிங்களத்தில் அழைக்கப்படுகிற தான சாலைகள் அமைத்து தானங்கள் வழங்குவார்கள். 

இது பௌத்த வழிபாட்டுத்தலங்களை மையமாகக் கொண்டு நடத்தப்படும் இப் பண்டிகையில் சீலங்காத்தல், போதி பூசை நடத்துதல், அன்னதானம் வழங்குதல், ஒலிப்பூசை நடத்துதல் போன்றவை இப்பண்டிகையில் அடங்கும் சிறப்பம்சங்களாகும்.

ஊர்ப் பன்னசாலையை முதன்மையாகக் கொண்டு வெசாக் பண்டிகை
மனங்கவரத்தக்கவாறு கொண்டாடப்படும். தோரணங்கள் அல்லது அலங்காரப்பந்தல்கள், வெளிச்சக்கூடுகள், வாழ்த்து மடல்கள், விளக்கு
வரிசைகள், மின்குமிழ் அலங்காரங்கள், கொடிகள் போன்றவற்றை பண்டிகைக்கு மேலும் அழகுசேர்ப்பனவாகும்.


வெசாக் பண்டிகைக்கான ஆக்கங்கள் படைப்பதற்காக, ரிசூத்தாள், குருத்தோலை,
நிறக்கடதாசி, ஈர்க்கு, சிரட்டை உட்பட பல்வேறு பொருள்கள், மூலப்பொருள்களை
பயன்படுத்தப்படும்.
• முற்றத்தில் பல்வேறு தளவுருவங்களை வரைந்து அவற்றின் வழியே வரிசையாக
வெசாக் விளக்குகள் வைத்து அவ்விளக்குகளை ஏற்றுவதன்
மூலம் அழகிய ஆக்கங்கள் அமைக்கப்படும்.
• கிராமப் புறங்களில் வாழைத்தண்டுகளில் வெவ்வேறு வடிவங்களில் வெசாக் விளக்குகள்
ஏற்றுவதன் மூலம் அழகிய ஆக்கங்கள் செய்யப்படும்.
• கடல் மாங்காய் காய்களும் வேறு காய் வகைகளும் விளக்கு வேலை அமைப்பதற்கான
மாற்றுப்பொருளாகப் பயன்படுத்தப்படும்.
• வெவ்வேறு இனமக்களின் அழகியல் இரசனை உணர்வை மேம்படுத்துவதற்கு வெசாக் பண்டிகை துணையாகும்.
மேலதிக கற்றலுக்காக மேலும் வெசாக் பண்டிகையினை வீடியோ காட்சினை பார்க்கவும்


கருத்துகள்